கூலி படம் வெற்றி பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருச்சி ரஜினி ரசிகர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விநாயகர் கோவிலுக்குள் கூலி படத்தின் ரஜினி புகைப்படங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரஜினி பேனருக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு பூசணிக்காய் உடைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் கூலி படம் நாளை வெளியாவதை ஒட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.






















