• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதிக்கும், வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan) உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் தற்போதைய ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக ரொக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணியை அடையாளம் காணவும், தேவையான நிறுவன ஆதரவைப் பெறவும் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஒரு தொழில்துறை வலயத்தை நிறுவுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும்  அவர்கள்  தெரிவித்தனர்.

அது மாத்திரமல்லாது இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ஆதன விற்பனைத் துறைகளில் முதலீடு செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

மேலும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், ரொக்ஸ் குழுமத்தின் தலைவர் உட்பட ஏனைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  நாட்டில் ஊழல் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், முதலீடுகளுக்கு நிறுவன மட்டத்தில், சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply