• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்களை கண்டித்த அயர்லாந்து அதிபர்

அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.

இந்தத் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்துள்ளார்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மைக்கேல் டி ஹிக்கின்ஸ், இந்திய சமூகம் அயர்லாந்தின் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது.

இந்திய சமூகத்தினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை என்றும், அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதுபோன்ற செயல்கள் முழு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.

தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டூப்ளினில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவசர உதவி எண்களைப் பகிர்ந்துள்ளது. 
 

Leave a Reply