பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை
தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் மேலும் கூறியதாவது:
“பிரதமரை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் அரசாங்கம் வீழ்ந்துவிடாது. எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் கட்டி எழுப்புகிறோம்” என்றார்.























