• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

இலங்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply