• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூலி படத்தை பார்த்த ரஜினி கூறியது என்ன?

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் ,. டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அனிருத் " சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த கூலியின் ஃபைனல் வெர்ஷனை பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது." என கூறியுள்ளார்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
 

Leave a Reply