இந்தி சினிமாவில் என்னை வெறும் கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் - பூஜா ஹெக்டே
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் ,.டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடமாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பூஜா கூறியதாவது.
"என்னை கூலி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட லோகேஷ் அழைத்த போது அது படத்துடைய வியாபாரத்தை பெரிது படுத்தும் என அவர் என்னை மதித்து அழைத்ததற்கு நன்றி. மேலும் அப்பாடலின் நடனமாடுவது மிகவும் கடினமாக இருந்தது.
மற்றொரு கேள்விக்கு அவர் " இந்தி சினிமாத்துறையில் என்னை வெறும் அழகு சேர்க்கும் கதாப்பாத்திரங்களுக்காகவே படத்தில் கமிட் செய்கின்றனர். நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததை அவர்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன். நான் இந்த இடத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னை ரெட்ரோ படத்தில் ருக்மிணி என்ற கதாப்பாத்திரமாக மாற்றினார். அவர் என் நடிப்பு ஆற்றலை நம்பினார்" என கூறியுள்ளார்.






















