கூலி திரைப்படம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
சினிமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் கூலி.
இந்த திரைப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்தும் அதிரடியாக நடைபெறுகிறது.
இத்திரைப்படத்தின் விசேட காட்சிகாக வட அமெரிக்காவில் 50,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கூலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
























