• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா

இலங்கை

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின்  2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

அதிபர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பேராதனை பல்கலைக்கழகத்தின்  தமிழ் பீடத்தின்  கலாநிதி எம்.எம். ஜயசீலன், கண்டி கோட்ட கல்வி பணிப்பாளர் தமிழ்செல்வன் மற்றும்  முன்னால் பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும்  பதக்கங்களை  வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வின் போது  குறித்த பாடசாலையில் கடமையாற்றி வேறு  பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ள   ஆசிரியர்களுக்கும்  ஞாபக சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply