• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இது குறித்து  ஜீவன் தொண்டமான் கருத்துத்  தெரிவிக்கையில்  ”தமிழ்நாட்டுக்கு  விஜயம் மேற்கொண்டிருந்த போது  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவகங்கை தொகுதியின் மானகிரியில் இடம்பெற்ற இச்சந்திப்பானது சுருக்கமானதாக இருந்தாலும் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது.  இதன்போது இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் உட்பட  பல முக்கிய விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினோம் ” எனத்  தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply