அமெரிக்க வரி விதிப்பினால் கனடிய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரி காரணமாக கனடிய பெற்றோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வரி காரணமாக பாடசாலை உபகரணங்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில்லறை விற்பனை நிபுணர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களள் மற்றும் ஆடைகள், மற்றும் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் பொருட்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை உபகரணங்களின் விலைகளில் இந்த வரி விதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல விற்பனையாளர்கள் கட்டணங்களை எதிர்பார்த்து முன்கூட்டியே பொருட்களை சேமித்து வைத்துள்ளனர், எனவே இந்த பொருட்களின் விலைகள் உடனடியாக உயர வாய்ப்பில்லை.
எனினும், கனடாவில் உள்ள சில பெரிய பண்டக்குறிகளைக் கொண்டநிறுவனள் அமெரிக்காவில் விலை உயர்வை பொருத்துவதற்காக இங்கு விலைகளை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.





















