• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரூ.5 மில்லியன் பெறுமதியான அம்பர்கிரிஸ் பறிமுதல்

திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் 05 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் (Ambergris)  தொகையை இலங்கை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திவுலப்பிட்டி-நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் திவுலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போது, இந்த அம்பர்கிரிஸ் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட அம்பர்கிரிஸின் எடை  1.2 கிலோ கிராம் ஆகும்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பர்கிரிஸ் என்பது திமிங்கிலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.
 

Leave a Reply