கூலி படத்தில் இளம் வயது ரஜினியாக சிவகார்த்திகேயன்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்தார். அப்புகைப்படத்தின் பின்னணியில் கூலி படத்தின் ரஜினிகாந்தின் கண்கள் திரையில் உள்ளது. அதே இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் கூலி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதேப்போல் அமீர்கான் அவர் சமீபத்தில் போட்ட பதிவில் சிவகார்த்திகேயனை டேக் செய்திருந்தார். இது மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
சிவகார்த்திகேயன் ரஜினியில் ஃப்ளாஷ் பேக் காட்சியில் நடித்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு மிகசிறந்த திரையனுபவமாக இருப்பதில் எந்தவித மாற்று கருத்துமில்லை.























