• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தற்காலிகமாகக் கைவிடப்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய  ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தனர்.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று காலை 8.00 மணிக்குள் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலினைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply