• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டுவில் வளர்மதி - 60

இலங்கை

தென்மராட்சி மட்டுவில் வளர்மதி சன சமூக நிலையம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடியது
இதன் நிறைவு நாள் விழா 10.08.2025 ஞாயிறு மாலை இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
நான் (லலீசன்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்
அமரர் பொன் நாகமணியால் உருவாக்கப்பட்ட சன சமூக நிலையம் இன்று பெரு வளர்ச்சி கண்டுள்ளது
வளர்மதி கல்விக் கழகம், வளர்மதி விளையாட்டு கழகம் , வளர்மதி மாதர் சங்கம், வளர்மதி அறங்காவல் புரியும் ஆலயம் என்று பெரு வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த விழாவிற்கென கணிசமானோர் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்தனர் 2000 ஆண்டிற்கு முன்பு வளர்மதி கல்விக் கழகத்தில் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராக சேவை செய்தேன். நீண்ட காலத்தின் பின் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன்.

Leave a Reply