பேட்ட படப்பிடிப்பின் போது நான் ரஜினியை பார்த்துக் கொண்டே இருப்பேன் - சிம்ரன்
இலங்கை
தமிழ் திரை உலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சிம்ரன்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை நடந்த ஒரு விழாவில் சிம்ரன் பேசியதாவது:-
நடிப்பு, நடனம், தோற்றத்தை நிலையாக வைத்துக் கொள்வது கஷ்டமான விஷயம். 20 வருடமாக அதை நிலையாக வைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் என்னுடைய நண்பர்கள்தான். திரிஷா நல்ல திறமையான நடிகை. அழகாக இருக்கிறார்.
மணி ரத்தினம் இயக்கத்தில் நடித்திருக்கிறார் விஜய், அஜித் ஆகியோருடன் நடித்து வருகிறார். ஜோடி படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடித்தோம்.
அந்த படம் நல்ல வெற்றி அடைந்தது அதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
டூரிஸ்ட் பேமிலி படம் இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.மனிதநேயத்தோடு இணைப்பு இருக்கும் படங்கள் நிறைய வர வேண்டும். வருடத்திற்கு இரண்டு படங்களாவது இதுபோன்று வரவேண்டும்.
தற்போதைய கால கட்டத்தில் செல்போன்கள் போன்ற விஷயங்கள் வாழ்க்கை நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறது. செல்போனுக்குள் தான் உலகமே இருக்கிறது என்று அனைவரும் நோயாளிகளாக ஆகிவிட்டோம். அது உண்மையான வாழ்க்கை கிடையாது.
இப்படிப்பட்ட விஷயங்களை கடப்பதற்கு டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் வரவேண்டும்.
எனக்கு முன்னுதாரணமான நடிகை ஸ்ரீதேவி தான். அவருடைய நடிப்பு நடனம், புடவை கட்டும் அழகு என அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது.
ரஜினி நடிப்பில் கூலி படம் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை. பேட்ட படப் பிடிப்பின் போது ரஜினியை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
இதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ரஜினி உடன் நடித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவரைப் போல் எளிமையான நடிகர் யாரும் கிடையாது. விழாக்களில் பங்கேற்கும் போது கூட எந்தவிதமான மேக்கப் இல்லாமலும் இயல்பாக வருவார். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் மிகப்பெரிய உதாரணமாக ரஜினி இருக்கிறார்.
அவர் குடும்பத்தை கொண்டு போகும் விதம் நடிப்பை கொண்டு போகும் விதம் ஆகியவை அனைவருக்கும் உதாரணமாக இருந்து வருகிறது. கூலி படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் பேசி னார்.























