வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடைவிதித்ததால் டிரம்ப் எச்சரிக்கை
வரி விதிப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தால் 1929ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி நிலையை போல் மீண்டும் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பல்வேறு நாடுகள் மீது டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்துள்ளதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமது வரிவிதிப்பு நிலைப்பாட்டை ஆதரித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் வரி விதிப்பு, பங்குச்சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
தினமும் புதிய சாதனை படைக்கப்போகிறோம். கோடிக்கணக்கான டாலர்கள், நமது நாட்டு கருவூலத்தில் கொட்டப்போகின்றன என்று தெரிவித்துள்ளார்.






















