டிக்கெட் முன்பதிவில் சாதனை - லியோவை ஓரங்கட்டிய கூலி
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது. படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50000 மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் தமிழ் நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்தனர். 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அதில் கூலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடங்கி 37 நிமிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டது. இதற்கு முன் அதிக முன்பதிவு செய்த படமாக இருந்த கே.ஜி.எஃப் 2 மற்றும் லியோ படங்களின் சாதனையை கூலி முறியடித்துள்ளது.
இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.





















