• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போயா தினத்தில் மதுபான விற்பணையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் கைது

இலங்கை

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று (08) சட்டவிரோதமாக அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 60 கால் போத்தல்கள் கொண்ட மதுபான போத்தல்கள், மதுபான விற்பனையின் மூலம் பெறப்பட்ட 4490 ரூபா பணத்தையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.எஸ். சஞ்ஜீவ தலைமையிலான பொலிசார் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண் ஒருவரை கைது செய்ததுடன் கால் போத்தல்கள் கொண்ட 60 மதுபான போத்தல்களையும் 4490 பணத்தை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

Leave a Reply