• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலா பட நடிகையின் தம்பி கொலை! அதிர்ச்சியூட்டும் சம்பவம்

சினிமா

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹூமா குரேஷி, இவர் தமிழில் காலா திரைப்படத்தில் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானார். மேலும் இவர் கேங்ஸ் ஆஃப் வசிபுர்,மஹாராணி, டபுள் எக்ஸ் எல், ஜாலி எல்.எல்.பி, மோனிகா ஓ மை டார்லிங் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி நிசாமுதீன் பகுதியில், நடிகை ஹூமா குரேஷியின் தம்பி ஆசிப் குரேஷி கொலை செய்யப்பட்டார். போலீஸ் தகவலின்படி, இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, கொலை ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆசிப் குரேஷிக்கு வயது 42 சிக்கன் கடை வியாபாரம் செய்து வந்தார்.

வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், ஆசிப் குரேஷி தனது வீட்டின் நுழைவாயில் அருகே ஸ்கூட்டர் நிறுத்தியிருந்த இரண்டு பேரிடம் வாகனத்தை மாற்றும்படி கேட்டார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டது. குற்றவாளிகள் அங்கிருந்து சென்றாலும், திரும்பி வருவதாக மிரட்டி சிரிது நேரத்திற்கு பின் ஆயுதங்களுடன் வந்து அவரை குத்தி கொலை செய்துள்ளனர்.

குற்றவாளிகளான உஜ்ஜ்வால் (19), கௌதம் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ட்டியில் ஆழ்த்தியுள்ளது.
 

Leave a Reply