புலி என்னைக்குமே புலிதான் - அருண் விஜய் நடித்த ரெட்ட தல டீசர் ரிலீஸ்
சினிமா
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். டீசர் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டீசரில் அருண் விஜய் கெட்டப் அட்டகாசமாக இருக்கிறது.
சமீபத்தில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்தார். மேலும் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.























