• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாகன இறக்குமதி தொடர்பில் மனம் திறந்தார் ஜனாதிபதி

இலங்கை

”வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது வாகன இறக்குமதி ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.மேலும் அவர், நாடாளுமன்றில் வாகன இறக்குமதிக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை எனவும் இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மக்கள் தராளமாக வாகனங்களை கொள்வனவு செய்யலாம் எனவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்  இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை” எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply