புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச
இலங்கை
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்தமிழர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அவர்களின் திட்டங்களை தற்போது நிறைவேற்றி வருவதாக தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவர் விமல்வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல்வீரவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து
விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளனர். எனவே புலம்பெயர்தமிழர்கள் பழிவாக்கும் நோக்கில் தற்போ நாட்டில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கடற்படை, இராணுவம் மற்றும் புலனாய்வு ஆகிய துறைகளில் புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளை
முற்றாக ஒழிப்பதற்கு கடற்படையினரே அழுத்தங்களை கொடுத்தனர் என்பதை புலம்பெயர்தமிழர்கள் நன்கு அறிவார்கள்.
இதனை நான் கூறவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியே இதனை தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு பாரியளவில் ஆட்பலம் இல்லாத நிலையே காணப்பட்டிருந்தது.
எனவே அதனை முகாமைத்துவம் செய்வதற்கு அவர்களிடம் இருந்த மிகப்பெரிய பலம் ஆயுதப் பலமே,
எனவே தான் உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு கடற்படையினர். இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினரை அழுத்தம் கொடுத்தனர்.
இதனாலே அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை புலம்பெயர் தமிழர்கள் ஆரம்பித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் தங்களின் திட்டத்தினை செயற்படுத்துகின்றனர்.
இதுவே தற்போது அநுரகுமார திசாநாயக்கவின் மறுமலர்ச்சியுகத்தின் திட்டமாகும். அதாவது மறுமலர்ச்சி யுகத்தினை ஏற்படுத்துவதாக கூறும் அநுர அரசாங்கம், புலம்பெயர்தழிமர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவே தெரிகிறது. இந்தநாட்டில் இராணுவம் கடற்படை அரசபுலனாய்வு துறை என்பன பலமிக்கதாக இருந்த வரலாறே கடந்த காலத்தில் காணப்பட்டது.
ஆனால் இன்று அங்கு வெற்றிடம் நிலவுகிறது.























