• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவை முழுமையாக கைப்பற்றுங்கள் - இஸ்ரேல் பிரதமரின் அதிரடி உத்தரவு

இலங்கை

இஸ்ரேல் பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் உட்பட, காசாவை முழுமையாக கைப்பற்ற அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மற்றும் பிணைக்கைதிகள் தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்க பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தை கூட்டிய போது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் எதிர்ப்பு ஹமாஸ் பயங்கரவாதிகள், பிணைக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரைப்படையினர் செல்லும்போது, பிணைக்கைதிகள், படைவீரர்கள் உயிரிழக்க நேரிடும் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆனால், இதை ஏற்காத அதிகாரிகள் பதவி விலகலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவை கைப்பற்றும் திட்டம் குறித்த செய்திகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் பதிலளித்தனர். இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் திரும்பத் திரும்ப வருபவை; பயனற்றவை. இது எங்கள் முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஹமாஸ் கூறியுள்ளது.


 

Leave a Reply