இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்
இலங்கை
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக தற்போது இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (05) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அறுகம்பை விரிகுடா பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால் மாட்டுமே பொலிஸ் மற்றும் முப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய பிரஜைகள் கூடும் இடங்கள் இருந்தால், அவர்கள் பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதப்படுவதால், அரசாங்கம் நிலையான பாதுகாப்பை வழங்கும் என்றும், இது எந்த வகையான சிறப்புப் பாதுகாப்பும் அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தினார்.
சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினருக்கும், அவர்களின் பூர்வீக நாட்டைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.






















