சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது - லோகேஷ் கனகராஜ்
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது "நான் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது. சுதா கொங்கரா கூறிய கதை மிகவும் நன்றாக இருந்தது. சிவகார்த்திகேயனும் "பிரதர் நீங்க வாங்க என்னைய நம்புங்க கண்டிப்பா நல்லா இருக்கும்ன்னு சொன்னாரு" கூலி திரைப்படத்தை இயக்கி வந்ததனால் அந்த காலக்கட்டத்தில் என்னால் நடிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.
இந்த காம்போ விரைவில் நடக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.























