• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் 23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

இலங்கை

யாழ்ப்பாணம், கடைக்காடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 102 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாவை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம், கடைக்காடு பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நேற்று (04) நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 0 சந்தேகத்திற்கிடமான பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 102 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.
 

Leave a Reply