தெவிநுவர எசல பெரஹெராவில் திடீரென குழம்பிய ஊர்வல யானை
இலங்கை
தெவிநுவர எசல பெரஹெரா ஊர்வலத்தின் போது, யானை ஒன்று திடீரென குழம்பியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோக் காட்சிகள்,
யானை திடீரென அதன் பாகனைத் தாக்கிவிட்டு, பின்னர் நடந்து செல்வதைக் காட்டுகிறது.
யானை தொடர்ந்து ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறது.
ஏனைய யானைப் பாகன்கள் குறித்த யானையை கட்டுப்படுத்தவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
பெரஹெராவைப் பார்க்க நடைபாதைகளில் அமர்ந்திருந்த பொதுமக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் செல்வதைக் காண முடிந்தது.























