முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க CIDக்கு அழைப்பு
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க நிதியைப் பயன்படுத்தி மேற்கொண்ட தனிப்பட்ட பயணம் தொடர்பான விசாரணைக்காகவே சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறித்த சர்ச்சைக்குரிய பயணம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23, ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதுடன் அவருடன் அந்த பயணத்தில் 10 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை நேற்று (04) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேராவிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.























