• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் பாதுகாப்பினைக் கருதி விசேட உத்தரவினைப் பிறப்பித்தார் ஜனாதிபதி

இலங்கை

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றையதினம் சபையில் அறிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12, அத்தியாயம் 40 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான தேவையை கருத்திற் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply