இலங்கை சினிமாத்துறையின் முன்னோடி சினிமாஸ் கே. குணரத்தினம்
இலங்கை
இலங்கை சினிமாத்துறையின் முன்னோடி '' சினிமாஸ் '' குணரத்தினத்தின் பிறந்தநாள் இன்று !
கே. குணரத்தினம் (K. Gunaratnam, KG) ) என அழைக்கப்பட்ட கனகசபை குணரத்தினம் இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகத்தவரும், தொழிலதிபரும் ஆவார். பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் குணரத்தினம். இவரது மூதாதையர் நல்லூரைச் சேர்ந்தவர்கள். பல இந்தியத் திரைப்படங்களை சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வந்த குணரத்தினம், இந்தியாவில் சிங்களத் திரைப்படங்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டவுடன், 1953 ஆம் ஆண்டில் இலங்கையில் சொந்தமாக ஒரு திரைப்படக் கலையகம் ஒன்றைத் தொடங்கி சிங்களப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். சுஜாதா என்ற இவரது முதலாவது சிங்களத் திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் 25 இற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்தார். சினிமாஸ் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் பல திரையரங்குகளை நிறுவினார். இதனால் இவர் பிரபலமாக "சினிமாஸ் குணரத்தினம்" என அழைக்கப்பட்டார். குறிப்பாக தமிழ் நாட்டின் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களான மாடர்ன் தியேட்டர்ஸ் - ஏ. வி. எம். - விஜயா - வாகினி நிறுவனங்களில் இலக்கை விநியோகம் இவர் கையிலேயே இருந்த
து. எம். ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்துக்கு ஏற்பட்ட பண நெருக்கடி இவராலேயே முடுவுக்கு வந்தது, ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். “எங்களது தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை சினிமாஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகையை, நாங்கள் வாங்கும் கடனுக்கு அடமானமாக வைத்துக்கொள்ளும் வகையில், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை உங்களிடம் தந்துவிடுகிறோம். என்று மெய்யப்ப செட்டியாரரிடம் உத்தரவாதம் தந்தார் . இலங்கைக்கு எம். ஜி.ஆர். விஜயம் செய்தபோது இவரது இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டது . 1983ம் ஆண்டில் நாட்டில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு யூலை வன்முறையின் போது, கொழும்பின் புறநகரான எந்தளையில் அமைந்திருந்த குணரத்தினத்தின் விஜயா ஸ்டூடியோவும் எரிக்கப்பட்டது. இங்கு ஏராளமான சிங்கள, தமிழ்ப் படங்களின் மூலப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. திரைப்படத் தொழிலிடன், வேறு பல தொழிற்துறைகளிலும் குணரத்தினம் ஈடுபட்டார். குமிழ்முனை எழுதுகோல்களைத் தயாரித்தார். கேஜி ஃபௌண்டன் பேனா அக்காலத்தில் பாடசாலை மாணவர்களிடையே பிரபலமானது. நெகிழிப் பொருட்கள், அஸ்பெஸ்டஸ் சிமெந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பல தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெற்றார்.
இவர் தலைவராக இருந்த நிறுவனங்கள்:
சினிமாஸ் லிமிட்டெட்
கேஜி கூட்டு நிறுவனங்கள்
ஃபூஜி கிராபிக்சு சிலோன் லிமிட்டெட்
ஃபோட்டோ கினா லிமிட்டெட். கேஜி என அழைக்கப்பட்ட கே. குணரத்தினம் 1989 ஆம் ஆண்டு 1989 ஆகஸ்ட் 9 இல் ஜே. வி. பி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார் .
Sukumar Shan























