• Welcome to TamilsGuide
செய்திகள் 1

10 வருடங்களின் பின்னர் தேசிய மீன்பிடிப் படகுகளின் கணக்கெடுப்பு நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை

நாட்டில் சுமார் 10 வருடங்களின் பின்னர் தேசிய மீன்பிடிபடகுக்  கணக்கெடுப்பு நடவடிக்கை   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பாணந்துறை மீன்பிடித்  துறையில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர்  ரத்னா கமகே தலைமையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பமானது.

அந்தவகையில் குறித்த கணக்கெடுப்பு  முதற் கட்டமாக   பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில்  இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்;   மீன்பிடி துறையின் நிலையான வளர்ச்சி  மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை  நோக்கமாக கொண்டு க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவித்துள்ளார்

அத்துடன் நாட்டின் கடற்கரையோரத்தில் இயங்கும் சுமார் 50 ஆயிரம் அமீன்பிடி படகுகளில் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதே இக் கணக்கெடுப்பின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply