• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சர்தார் 2 படக்குழு

சினிமா

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு 'சர்தார்-2' படக்குழு அவருக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply