• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலசல கூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு

இலங்கை

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் குழி ஒன்றிலிருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 05.30மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிருவன் தனது கைகளை கழுவுவதற்கு வீட்டின் பின்புறத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட குழிக்கு சென்ற வேளை, அதில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது மகனை கானவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வாரததை அடுத்து தந்தை விட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதனிகள் இரண்டும் மிதந்து கொண்டு இருந்ததாகவும் அதன் பின்னர் சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே சிறுவன் உயிரழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை 08 வயதுடைய லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொள்ள தடையவியல் பொலிஸார் வரவலைக்கப்பட்டு உடல் கூட்டு பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply