• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரத்தியேக செயலாளர் சி.ஐ.டி.யில் முன்னிலை

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க பெரேரா இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

இந்த விசாரணை 2023 செப்டம்பர் 13 முதல் 24 வரை நடத்தப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தை மையமாகக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply