• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் -எஸ்.எம்.மரிக்கார்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது ” முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச்செய்வதற்காக அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் நீண்டகாலமாக மக்களின் வரி பணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் சுகபோகம் அனுபவித்து வருவது நியாயம் இல்லை.

ஆனால் இந்த ஜனாதிபதிகள் நாட்டுக்கு செய்த சேவைகள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இல்லாமலாக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அத்துடன் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை இரத்துச்செய்யும் இந்த நடவடிக்கையை, ஒரு பெஷனாகவே மேற்கொள்கிறது.

அவ்வாறு இல்லாமல் நியாயமான உரிமைகளை வழங்கி, அநியாயமான விடயங்களை நீக்குவதில் பிரச்சினை இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டு மக்களின் ஜனாதிபதி, அவருக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.
 

Leave a Reply