• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூலி படத்தில் வில்லனாக நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. 

சினிமா

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவர் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளிவந்தது.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கூலி படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா நடித்துள்ளார். அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் நாகர்ஜுனா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 24 கோடி சம்பளமாக நாகர்ஜுனா வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
 

Leave a Reply