ரூ.250 கோடியில் வீடு கட்டும் ஆலியா பட்- ரன்பீர் கபூர்
சினிமா
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ரன்பீர்கபூர்-ஆலியா பட் ஜோடி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, ஒரு மகள் இருக்கிறார். இந்த நட்சத்திர ஜோடி தங்களின் கனவு இல்லத்தை, மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் கட்டி வருகிறது. மிகவும் ஆடம்பரமாக 6 அடுக்கு மாடியாக கட்டப்படும் இந்த வீட்டின் செலவு ரூ.250 கோடி என்கிறார்கள்.
நம்முடைய கலாசாரத்தைக் காக்கும் வகையிலும், நவநாகரிகத்தை உள்ளடக்கியதாகவும் இந்த வீட்டை ரன்பீர்-ஆலியா ஜோடி கட்டி வருகிறார்கள்.
கட்டிடப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் ஆலியா பட் தன்னுடைய மாமியார் நீத்து கபூருடன் இந்த வீட்டை மேற்பார்வை செய்துள்ளார்.
இந்த வீட்டிற்கு வெகு விரைவில் கிரகப்பிரவேச நிகழ்வு இருக்கலாம் என்கிறார்கள். அதோடு வீட்டிற்கு ரன்பீர் கபூரின் பாட்டி கிருஷ்ணா ராஜ்கபூர் நினைவாக 'கிருஷ்ணா ராஜ்' என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.






















