கூலி படத்தின் நேர அளவை முடிவு செய்த படக்குழு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடக்க இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 48 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசப்போகும் அந்த ஸ்பீச்சிற்காக பலரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவாகி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் இப்படத்திற்கு தான் முதல் ஏ சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
























