• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கான செய்தி

கனடா

கடந்த மே மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 20,400ஆக (4.1%) குறைந்துள்ளது.

இது கடந்த 2017 அக்டோபருக்குப் பின்னர் நாட்டில் பதிவான மிகக் குறைந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே 3.4% வீழ்ச்சி பதிவாகியிருந்தது. கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த வீழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகப் போர்கள் காரணமாக கனடிய நிறுவனங்கள் எதிர்கால நிச்சயமற்ற தன்மையினால் பணியமர்த்தலை குறைத்து, நிலையான செயல்பாடுகளை மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

நிச்சயமற்ற சூழலில் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை சேர்ப்பதைத் தவிர்க்கின்றன தெரிவிக்கப்படுகின்றது.

2025 தொடக்கத்தில் 38% ஊழியர்கள் வேறும் வேலைகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது 26% ஆகக் குறைந்துள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகத்தையும் பாதித்துள்ளது. 

Leave a Reply