வெப்பநிலை அதிகரிப்பு - பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான வெப்ப சுட்டெண் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் விளைவுகளை இணைப்பதன் மூலம் வெப்ப சுட்டெண் கணக்கிடப்படுகிறது, மேலும் உடலில் வெப்பத்தின் உண்மையான உணர்வை பிரதிபலிக்கிறது.
எனவே மக்கள் அதிகளவு நீரை அருந்தவேண்டும் மற்றும் பணி செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வெப்ப அலைகளின் போது மக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோய் நிலையுள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.























