• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

குறித்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இடைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு வரைவு சட்டமூலங்கள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply