• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - 567 நீதிமன்ற வழக்குகள்

இலங்கை

கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இதன்போது, உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஏழு நபர்கள் உட்பட மொத்தம் 36 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம், 2025 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ரூ. 199.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் SLBFE குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply