பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் ரகசியம்
சினிமா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) திரைக்கு வருகிறது. படத்தில் பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருக்கும் 'மோனிகா...' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடை 'வெர்சா மெடுசா 95 கிராப்ச் கவுன் வகையை சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு மட்டுமே ரூ.5 லட்சம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் 7 விதமான உடைகள் கொண்டுவரப்பட்டதில், பூஜா ஹெக்டே இந்த உடையை தான் தேர்வு செய்துள்ளாராம்.
என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும், 'பூஜா ஹெக்டேவின் பொன்மேனிக்கு இந்த விலை உகந்தது தான்' என்று அவரது ரசிகர்கள் 'முட்டு' கொடுத்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், தினக்கூலி தொழிலாளர்களை துன்புறுத்தும் கும்பலை எதிர்த்து போராடும் அச்சமற்ற ஒரு துறைமுக கூலி தொழிலாளியின் கதை தான் 'கூலி' என்ற ஒரு தகவலும் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.























