• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் மரணம்

இலங்கை

மருதானையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், லொறி ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மருதானை பகுதியைச் சேர்ந்த 44 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவரது கணவர் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினர் , நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை பார்வையிட சென்றுள்ள வேளை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மில்லகஹமுல பகுதியில் கொழும்பிலிருந்து வட்டவளை நோக்கி சென்ற லொறி ஒன்றை  முந்திச் செல்ல முற்பட்ட போது  விபத்தியில் சிக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த பெண் லொறியின் பின்புற சக்கரத்திற்கு சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply