• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்டி ஏரியில் சடலம் ஒன்று மீட்பு

இலங்கை

கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற யானைப் பாகனின் உதவியாளர் ஒருவரின் சடலம் இன்று (31) காலை கண்டி ஏரியின் கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் கண்டியில் நடைபெறும் வருடாந்திர எசல பெரஹெராவில் பங்கேற்க அரநாயக்க பகுதியிலிருந்து வந்திருந்தார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற யானையின் பாகனுக்கு உதவியாளராக அவர் பணியாற்றி வந்தார்.

இறந்தவர் அச்சலங்க என்ற 28 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply