• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முத்து நகர் காணிகள் சர்ச்சை - நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன விளக்கம்

இலங்கை

திருகோணமலை முத்து நகர் பகுதியில் இடம்பெற்று வரும் விவசாய நில அபகரிப்பு விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளார்

இதன்போது குறித்த காணிகள் கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் குறித்த காணிகளில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த காணிகள் பிற்பட்ட நாட்களில்  அபிவிருத்தி நடவடிக்கைக்காக பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், எனவே இவை துறைமுக அதிகாரசபையின் சொத்துகளாகவே கருதப்படுகின்றன” எனவும்  அவர் வலியுறுத்தினார்.
 

Leave a Reply