• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாம வாழ ஆரம்பிச்சு இத்தனை வருடமாச்சு- ரங்கராஜின் 2 ஆவது மனைவி கொடுத்த அதிர்ச்சி 

சினிமா

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் தற்போதைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரையில் பலராலும் நன்கு அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார்.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த திருமணம் கோவிலில் மிக எளிமையான பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளது. அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் தற்போதைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் அவர் குறிப்பிடுகையில், சில பயணங்கள் அமைதியாகவே ஆரம்பிக்கும். ஆனால் அது நம்பிக்கையில் வளர்ச்சியடையும்... நாங்கள் சில வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்துவருகின்றோம். தற்போது எங்களின் குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் தருணத்தில் இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.  இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்போ விவாகரத்து எப்போ கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply