சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு - இயக்குநர் பா.ரஞ்சித் நீதிமன்றத்தில் ஆஜர்
சினிமா
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
அப்போது இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கீழ்வேளூர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் ஆஜரானார். அப்போது பா.ரஞ்சித்தை நீதிமன்ற பிணையில் விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஏற்கனவே இந்த வழக்கில் 3 பேர் முன்ஜாமின் எடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது






















