• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு ஒகஸ்ட் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பனங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதுன் விதானகே இன்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த வழக்கில் ஆஜரானார்.

இந்தத் தடை உத்தரவு திலக்சிறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாணயக்காரவுக்கு எதிராக எந்தவொரு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்தோ அல்லது ஈடுபடுவதிலிருந்தோ தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply